SP பட்டினம் ஜாமிஆ அல்அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற கோபாலப்பட்டிணம் ஆலிம்கள்!



ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டினத்தில் (சுந்தரபாண்டிய பட்டினம்) உள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் மெளலவி ஆலிம் பட்டம் பெற்ற ரியாழ் முஹம்மது மற்றும் ஷாகுல் ஹமீது மேலும் அல்ஹாஃபிழ் பட்டம் பெற்ற முஹம்மது நூருல்லாஹ்.

கடந்த 01-04-2021 வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் S.P பட்டிணம் பாக்கவி அரங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும், மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியருமான மெளலானா மெளலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் P.A ஹாஜா முயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

அல்ஹாஃபிழ்  A. ரியாழ் முஹம்மது குத்ஸி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கம்புலி குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் KKA.கிதுரு அமானுல்லாஹ், மர்ஹும் மன்சூர் அலி அவர்களின் பேரனும் ஜனாப் A.அய்யூப் கான்-நஜிமா பேகம் தம்பதியினரின் மகன் மௌலவி அல்ஹாஃபிழ் A.ரியாழ் முஹம்மது எஸ்.பி பட்டிணத்திலுள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று மௌலவி (அல்குத்ஸி) பட்டம் பெற்றுள்ளார்கள். 

அல்ஹாஃபிழ் R.ஷாகுல் ஹமீது குத்ஸி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் தெருவைச் சேர்ந்த (அரக்காசு  வீடு) மர்ஹும்.அப்துல் லத்தீஃப், மர்ஹும்.கலந்தர் ஹாஜியார் அவர்களின் பேரனும் (அஜ்மீர் கடை) ஜனாப் A.ராவுத்தர் நெய்னா முஹம்மது, K.கமர் நிஷா தம்பதியினரின் மகன் மெளலவி அல்ஹாஃபிழ் R.ஷாஹுல் ஹமீது குத்ஸி எஸ்.பி பட்டணத்திலுள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று மௌலவி (அல்குத்ஸி) பட்டம் பெற்றுள்ளார்கள். 

அல்ஹாஃபிழ் R. நூருல்லாஹ்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் தெருவைச் சேர்ந்த (அரக்காசு வீடு) மர்ஹும்.அப்துல் லத்தீஃப், மர்ஹும் கலந்தர் ஹாஜியார் அவர்களின் பேரனும் (அஜ்மீர் கடை) ஜனாப் A.ராவுத்தர் நெய்னா முஹம்மது, K.கமர் நிஷா தம்பதியினரின் மகன் மெளலவி அல்ஹாஃபிழ்.R.நூருல்லாஹ் எஸ்.பி பட்டணத்திலுள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று அல்ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளார்கள்.




மார்க்க சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றிட GPM MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments