அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இன்று மே.19 முதல் காய்கறி மார்க்கெட் செயல்பட நடவடிக்கை!அறந்தாங்கி தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

அங்கு போதுமான இடவசதி இல்லாததால் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் அய்யனார், சுகாதார அலுவலர் சேகர் ஆகியோர் அறந்தாங்கி பஸ் நிலையத்தை தற்காலிகமாக தினசரி காய்கறி மார்க்கெட்டாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். 

இந்த நிலையில் நேற்று அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த்மோகன் பஸ் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். பஸ்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) முதல் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments