இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!



தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்திற்கு உள்ளே பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு இ பாஸ் முறை கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் லாக்டவுன் விதிகள் கடுமைக்கப்பட்டுள்ளது. மே 15 காலை முதல் லாக்டவுன் விதிகள் தீவிரமாக்கப்படுகிறது.

இதையடுத்து வரும் மே 17ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களிளுக்கு உள்ளே பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இ பாஸ் தேவையில்லை மாறாக இ பதிவு அவசியம் என்று அரசு கூறியுள்ளது. இ பாஸ் மற்றும் இ பதிவிற்கான (registration) வேறுபாட்டை தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கி உள்ளது.

இ பதிவு 

இ பதிவு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்படுகிறது.

எப்படி? 

மாறாக,மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு(e-registration) செய்யலாம்.

ஆதாரம் 

இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என்று தமிழக அரசு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இ பாஸ் கிடைக்க பொதுவாக 2-3 நாட்கள் தாமதம் ஆகும். மாவட்டங்களுக்கு இடையில் அவசர பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இது சிக்கலாகும்.

அத்தியாவசியம் 

அதேபோல் திருமணம், மரணம் போன்ற அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கும் சிக்கலாகும். இதன் காரணமாக இ பாஸுக்கு பதிலாக இ பதிவை செய்துவிட்டு, அதற்காக வழங்கப்படும் ஆதராத்தை மட்டும் காட்டிவிட்டு பயணம் மேற்கொள்ளலாம். இதனால் 2-3 காத்திருக்கலாம் உடனே இ பதிவு செய்துவிட்டு, உடனுக்குடன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments