தாறுமாறாக ஓடிய அரசு பஸ் தூணில் மோதி நின்றது




புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் தூணில் மோதி நின்றது. பெண் பயணி காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அரசு டவுன் பஸ்
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் கீரனூரில் இருந்து உப்பிலியக்குடி வழியாக புதுக்கோட்டைக்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அப்போது புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்ததும், வழித்தடத்தில் பஸ்சை டிரைவர் மதியழகன் நிறுத்த முயன்றார்.


ஆனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி பஸ்சுக்காக காத்்திருந்த பெண் பயணி மீது மோதி விட்டு, பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தூண் மற்றும் டீக்கடையில் மோதி நின்றது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பஸ்சுக்காக காத்திருந்த உப்புபட்டியை சேர்ந்த வளர்மதி (வயது 40)  பலத்தகாயமடைந்தார். அவர்  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெரும் விபத்து தவிர்ப்பு

இந்த விபத்தில் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தூண், டீக்கடை மற்றும் அதன் அருகே உள்ள இனிப்பக கடையில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. பஸ் மோதிய வேகத்தில் கான்கிரீட் தூண் சேதமடைந்து வளைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அந்த பஸ் நிறுத்துமிடத்திலும், டீக்கடையிலும் பயணிகள் கூட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments