17ம் தேதி ஒரிஜினல்: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள், வரும் 17ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், மே மாதம் தேர்வுகள் நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா 2வது அலை தாக்கியதால், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

அதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 2019-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றுகளை, மாணவர்கள் படித்த பள்ளிகளில் 17ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments