இனி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கேட்டால் திரையில் எழுத்துக்கள் தோன்றும் - செம்ம அப்டேட்!
வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் முதலில் ஐ.ஓ.எஸ் (iOS) வெர்சன் ஆப்பிள் மொபைல் போன்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வர உள்ளது.

வாய்ஸ் மெசேஜூக்கு டிரான்ஸ்கிரிப்சன் கொடுக்கும் அடுத்த அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த சில வாரங்களாக அப்டேட்டுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. தற்போது, விரைவில் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட் குறித்த தகவலை WaBetaInfo தளம் அறிவித்துள்ளது. டிவிட்டரில் 100K பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளதை கொண்டாடும் விதமாக, வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அப்டேட்டை யூசர்களுக்காக வெளியிட்டுள்ளது. தற்போது, அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும்போது, அவர்கள் பேசுவது திரையில் எழுத்துகளாக தோன்றும் டிரான்ஸ்கிரிப்சன் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் முதலில் ஐ.ஓ.எஸ் (iOS) வெர்சன் ஆப்பிள் மொபைல் போன்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆப்பிள் போன்களில் இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் சாப்ட்வேர் மூலம் ஒலி, டிரான்ஸ்கிரிப்சன்களாக மாறும். ஆப்பிள் போன் யூசர்கள், வாய்ஸ் மெசேஜை டிரான்ஸ்கிரிப்சன்களாக மாற்றுவதற்கு முதலில் அந்த தொழில்நுட்பத்திற்கான அணுகலைக் கொடுக்க வேண்டும். இந்த செட்டிங்ஸை எனேபிள் செய்தவுடன் வாய்ஸ் மெசேஜ்களை கேட்கும்போதெல்லாம், டிரான்ஸ்கிரிப்சன்கள் திரையில் தோன்றும்.

ஒருமுறை ஒரு மெசேஜை டிரான்ஸ்கிரிப்சன்கள் செய்யப்பட்டிருந்தால், அந்த எழுத்துகள் பேக்கப்பில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படும்போது யூசர்கள் அதனை மீண்டும் திறந்து பார்த்துக்கொள்ளலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் மொபைல்களுக்கு ஏற்கனவே இந்த சேவையை வழங்குகிறது. வாட்ஸ் அப் நிறுவனமும் இப்போது இந்த சேவையை வழங்க இருப்பது, யூசர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆன்டிராய்டு மொபைல்களுக்கு இந்த சேவை எப்போது வரும் என்ற தகவலை வாட்ஸ் பீட்டா இப்போது தெரிவிக்கவில்லை.


இதேபோல், அண்மையில் குறிப்பிட்ட கான்டெக்டுகளுக்கு மட்டும் லாஸ்ட் சீன் ஆப்சனை பயன்படுத்தும் அம்சத்தையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே லாஸ்ட் சீன் ஆப்சனை மறைத்து வைத்துக்கொள்ளும் ஆப்சன் இருந்தாலும், அதனை குறிப்பிட்ட கான்டெக்டுகளுக்கும் பயன்படுத்த முடியாது. இது யூசர்களுக்கு சிக்கலாக இருந்ததால், அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த அப்டேட்டை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.


வாட்ஸ்அப் செட்டிங்ஸில் பிரைவசிக்கு சென்றால், அங்கு மை கான்டெக்ட்ஸ் எக்செப்ட் என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் லாஸ்ட் சீன் ஆப்சன் குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் தெரியும்படி தேர்வு செய்து கொள்ளலாம். புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம், மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. இதனால், உலகளவில் யூசர்களை மிகப்பெரிய அளவில் இழந்தது. இந்த காலி இடத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன. விட்ட இடத்தை பிடிக்க தீவிரமாக செயலாற்றி வரும் வாட்ஸ் அப், புதிய அப்டேட்டுகளை சரமாரியாக இறக்கி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments