போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க கோரி நவாஸ்கனி எம்பி காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சி. சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களை சந்தித்து வலியுறுத்தல்.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க கோரி நவாஸ்கனி எம்பி காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சி. சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களை சந்தித்து வலியுறுத்தல்.

--

இது குறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி, காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சி. சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களிடம் விடுத்த கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது.,

காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதை அறிந்தேன்.
தங்களின் சிறப்பான பணிகளுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவ்வப்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், கட்டுப்படுத்த முடியாத வண்ணம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த வசீம் அக்ரம் கோரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தாங்கள் அறிவீர்கள்.

இதுபோன்று மீண்டுமொருமுறை நடைபெறாது இருக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தாங்கள் நேரடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி, காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சி. சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களிடம் விடுத்த கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments