பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபாலப்பட்டிணம் 3-வது வார்டு மற்றும் 4-வது வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளிப்பு!!கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு மற்றும் 4-வது வார்டு உறுப்பினர்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் மற்றும் 4-வது வார்டு உறுப்பினர் மும்தாஜ் பேகம் ஆகியோர் நேற்று 21.09.2021 செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைள் பின்வருமாறு:

1.கோபாலப்பட்டிணம் ஊர் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி,
2.கோபாலப்பட்டிணம் கிராமத்தில் தெரு விளக்கு, அங்கன்வாடியில் புதிய மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்து தரக்கோரி,
3.கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள நெடுங்குளத்தை சுற்றி உள்ள கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யகோரி,
4.நெடுங்குளம் பெண்கள் குளிக்கும் பகுதியில் படித்துறை அமைக்க கோரி

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் இரண்டு மனுவும், 4-வது வார்டு உறுப்பினர் மும்தாஜ் பேகம் அவர்கள் இரண்டு மனுவும் அளித்தனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர் ஸ்டெல்லா அவர்கள் உடனிருந்தார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments