கோபாலப்பட்டிணம் ஷாகின்பாக் ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கை!



கொரோனா பேரிடருக்கு முன்பாக தேசிய அளவில் இஸ்லாமிய சமூக மக்களுக்கு பேரடியாக இருந்த செய்தி இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் என்கிற CAA,NRC,NPR. மத்திய பாசிச அரசின் இந்த கொடிய சட்டத்தினை எதிர்த்து கேரளா போன்ற மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய போதும்

தமிழ்நாடு அரசில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் முதலமைச்சராகவும் அரியணையை அலங்கரித்த அப்போதைய அதிமுகவினர் முஸ்லிம்களின் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை செவிசாய்க்காமல் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அடக்குமுறைகளையே கையாண்டனர்.

தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு அரியணை ஏறிய திமுக இஸ்லாமியர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது.அந்த வகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்டனங்களையும் திமுக தலைமையிலான அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ஷாஹின்பாக் போராட்டக்களத்தில் எங்களோடு களத்தில் நின்று இந்த கருப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்த அனைத்து அமைப்புகள் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

-ஷாகின்பாக் ஒருங்கிணைப்பாளர்கள்,
 கோபாலப்பட்டிணம்
98949 53738, 86818 15683

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments