பொள்ளாச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு அழகிய முன்மாதிரி விருது!பொள்ளாச்சியில் ஆலிவ் கிட்ஸ் இஸ்லாமிக் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு அழகிய முன்மாதிரி விருது வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி ஆலிவ் கிட்ஸ் இஸ்லாமிக் இன்டர்நேஷனல் பள்ளியில் வலைதளம் திறப்புவிழா, மொபைல் கிளினிக் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா, சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 8.10.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரத்ததான முகாம், விழிப்புணர்வு அரங்கக்கூட்டம், வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் போன்றவைகளை செய்து கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிற கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு வஃப் வாரிய தலைவர் ஜனாப்.அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் EX MP அவர்கள் அழகிய முன்மாதிரி விருதினை வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிற சமூக அர்ப்பணிப்பாளர்களுக்கு அழகிய முன்மாதிரி விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் சகோதரி சபரிமாலா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments