இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றக்கோரி போராட்டம்!கல்வி நிலைய வளாகங்களில் தொடரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக தனிச்சட்டம்  இயற்ற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி நிலையங்களில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வினோத் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கண்டன உரையாற்றினார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாதீர், பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

கறம்பக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு லக்சாயினி தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சந்தோஸ் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வைரமணி, பாலாஜி உள்ளிட்டோர் பேசினர். போராட்டங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments