அறந்தாங்கியில் 750 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் லீமாசைமன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் சேகர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம், காந்தி பூங்கா சாலை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 750 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments