பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
நெல்லையில் தனியார் பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் செல்வகுமார் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் பொன்னையா திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கும், சென்னை மாநில திட்ட இயக்ககம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வாசு புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிகல்வி ஆணையர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments