சார் பதிவாளர் அலுவலகங்களில் ஜன.1 முதல் 70 வயது கடந்தவருக்கு உடனே பத்திரப் பதிவு




சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பதிவு செய்யும் நடைமுறை வரும் ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஸ்டார் 2.0 மென்பொருளில் தற்போது எவ்வித பாகுபாடும் இன்றி, முன்பதிவு செய்த வரிசையில் பத்திரப் பதிவு நடந்து வருகிறது. இவ்வாறு வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்படும்போது, சார் பதிவாளர் அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு, இனிமேல் பத்திரம் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் ஒருவர் 70 வயதை கடந்தவராக இருந்தால், அவர்கள் தங்கள் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்ததும் உடனடியாக பதிவு செய்யும் வகையில், மென்பொருளில் உரிய மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு 2022 ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments