ஆலங்குடி காவல் நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்து ,மரக்கன்று நட்டு வைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்‌ IPS அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்து காவலர்களின் குறைகள் கேட்டு நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்தும், காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள்...

25.12.2021 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், ஆலங்குடி காவல்நிலையத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்விற்காக ஆலங்குடி காவல்நிலையத்திற்கு வருகை தந்து வழக்கு கோப்புகள், நிலைய பதிவேடுகளை பார்வையிட்டும், புலன்விசாரணை நிலையில் உள்ள வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிமன்றத்தில் வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும், சாட்சிகளை நீதிமன்றத்தில் காலதாமதம் இன்றி ஆஜர் செய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தர காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியும், காவல் ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தும் குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார்கள்.

மேலும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலங்குடி காவல் நிலைய  வளாகத்தில் மரக்கன்றினை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

ஆய்வின்போது ஆலங்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. வடிவேல் அவர்கள் கலந்துகொண்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments