பேராவூரணி : ரெயில்வே தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும், சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் கோரிக்கை





பேராவூரணி : ரெயில்வே தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும், 31 ஆண்டுகளாக 7 தமிழர்களையும், 26 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களையும்  விடுதலை செய்ய வலியுறுத்தி  தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பேராவூரணியில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தங்க குமாரவேல் தலைமை வகித்தார். அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், அமைப்புச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும், 
26 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வலியுறுத்தி பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்துவது, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு தலையிடுவதை கண்டிப்பது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது, தமிழக மக்கள் விடுதலை இயக்கம் என்ற பெயரில் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சுயநிர்ணய உரிமையையும் தன்னாட்சி யையும் வலியுறுத்தும் விதமாக 15&ம் ஆண்டு தொடக்கமாக குடியரசு தினத்தில் இருந்து தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் என பெயர் மாற்றம் செய்வது.

ரெட்டவயல் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசை கேட்டுக் கொள்வது, திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரயில்வே கேட் எண் 132 சியில் அமைக்கப்பட்ட சொர்ணகாடு தரைக்கீழ் பாலம் பொதுமக்களும், வாகனங்களும், பேருந்துகளும் செல்ல முடியாத நிலையில் தவறாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எனவே தரைப்பாலத்தை மூடிவிட்டு, மேம்பாலம் கட்டி தர வேண்டும் 
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments