செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனிலா? நேரிலா? உயர்கல்வித்துறை விளக்கம்






தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜன.30ஆம் தேதி முழு முடக்கம் ரத்து செய்யப்படுகிறது என அரசு அறிவித்திருந்தது. 

இன்று முதல் (ஜன.28 ஆம் தேதி) இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்ற குழப்பம் இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 1 -ஆம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதால் நேரடி தேர்வு நடைபெறலாம் என்று கூறப்பட்ட நிலையில் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments