விடுதலைப் போரில் தமிழகத்தின் தியாகிகள் நினைவு வாகனத்தை விராலிமலையில் அமைச்சர்கள் வரவேற்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் மேலப்பச்சக்குடியில் வருகை தந்ததையொட்டி சட்டத்துறை எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வரவேற்று பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் குடியரசு தினத்தன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் விடுதலை போராட்ட தியாகிகளின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தியானது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை வட்டம் மேலப்பச்சக்குடியில் வருகை தந்ததையொட்டி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஊர்தியினை வரவேற்று பார்வையிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடியில் வருகை தந்த அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலையில் பார்வையிட்டார்கள்.

மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்காக செல்கிறது.

இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி.

ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படையை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள்

ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியசீலன், ஊராட்சிமன்றத் தலைவர் லதா சுப்பிரமணியன், மணி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments