தோ்தல் நடத்தை விதி மீறல் தெரிவிக்க தொடா்பு எண் அறிவிப்பு - கலெக்டர் தகவல்


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் இருப்பின் பொதுமக்கள் அதுகுறித்த புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கவிதா ராமு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகளும், அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, இலுப்பூா், கறம்பக்குடி, கீரனூா், கீரமங்கலம் மற்றும் பொன்னமராவதி என 8 பேரூராட்சிகளும் ஆக மொத்தம் 10 நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் வாக்குப்பதிவு வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அறந்தாங்கி நகராட்சியில் 27 வாா்டுகளும், புதுக்கோட்டை நகராட்சியில் 42 வாா்டுகளும், 8 பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் வீதம் மொத்தம் 189 வாா்டுகளுக்கான உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். புதுக்கோட்டை நகராட்சியில் 63,739 ஆண் வாக்காளா்களும், 68,472 பெண் வாக்காளா்களும், 17 திருநங்கைகளும் என மொத்தம் 1,32,228 வாக்காளா்கள் உள்ளனா்.

அறந்தாங்கி நகராட்சியில் 17,090 ஆண் வாக்காளா்களும், 18,601 பெண் வாக்காளா்களும், 2 திருநங்கைகளும் என மொத்தம் 35,693 வாக்காளா்கள் உள்ளனா். 8 பேரூராட்சிகளில் 39,663 ஆண் வாக்காளா்களும், 41,377 பெண் வாக்காளா்களும் 3 திருநங்கைகளும் என மொத்தம் 81,043 வாக்காளா்கள் உள்ளனா். தோ்தல் நடைபெறும் மொத்த இடங்களில் 2,48,964 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா். தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட ஜன. 26ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தத் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்க ஏதுவாக 04322-221691 என்ற தொலைபேசி எண்ணில் ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என்றாா் கவிதா ராமு.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments