நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டி
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகின்றது.‘ஊழல் இல்லா உள்ளாட்சி, நேர்மையான நல்லாட்சி’ என்ற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடும் வார்டுகளும், வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் தூய்மையுடன் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments