திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் சரக்கு ரயில் இயக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை






கொள்முதல் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்ப  திருவாரூர்-காரைக்குடிக்கு சரக்கு ரயில் இயக்க வேண்டும் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட செயலாளர் டாக்டர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

திருவாரூர்-காரைக்குடிரயில் பாதை ரூ.1,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு 4 வருடங்களாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இயக்கப்படாமல் உள்ளது. டெல்டா மாவட்டத்தில் நெல் அறு வடை செய்யப்பட்டு அரசு நெல்கொள் முதல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.இவற்றை நெல் அரவைக்கு பல மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும். நெல் மூட்டைகளை லாரிகளில் அனுப்புவது கடினம்.

திருவாரூர்-காரைக்குடி சரக்கு ரயில் இயக்கப்பட்டால் நெல் மூட்டைகளை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பல மாவட்டங்களுக்கு குறைந்த செலவில் கொண்டுசெல்லலாம்.ரயில்வே துறைக்கும் மிகவும் லாபகரமாக இருக்கும். திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து ரயில்களில் நெல் மூட்டைகளை ஏற்ற ஏதுவான வசதிகள் உள்ளது. அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் மூட்டைகள் தேங்காமல் உடனடியாக அனுப்பினால் மழையால் பாதிப்படைவதை தவிர்க்கலாம்.

இது குறித்து திருச்சி மண்டல ரயில்வே நிர்வாக அதிகாரிகள் திருவா ரூர்-காரைக்குடி வழியில் சரக்கு ரயில் போக்குவரத்தை இயக்க ஆவனசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments