ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், ஆதார் எண் சேர்த்தல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய பொதுமக்கள் நலன் கருதி (www.tnpds.gov.in) இலவசமாக இயங்கி வருகிறது.

பொதுமக்கள் யாருடைய உதவியுமின்றி, தங்களுடைய செல்போன் வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் ஏதேனும் தகவல் தேவை என்றால் அனைத்து பணிகளுக்கும் தங்கள் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

மாறாக இடைத்தரகர்கள், மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ள தேவையில்லை. அவ்வாறு கூறுபவரின் விவரங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04322 221577 மற்றும் 94450 00311-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

புதுக்கோட்டை தனி தாசில்தார்- 9445000312, ஆலங்குடி தனி தாசில்தார்- 9445000313, குளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000314, கந்தர்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலர்- 9445000315, திருமயம் வட்ட வழங்கல் அலுவலர்- 9445000316, அறந்தாங்கி தனி தாசில்தார்- 9445000317, ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர்-9445000318, மணமேல்குடி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000320, பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000404, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000405, 9786254066, இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் -9445000319, விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர்-9080487553 ஆகிய செல்போன் எண்களில் புகார் அளிக்கலாம். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு தாசில்தார் அலுவலகங்களில் இ-சேவை மையங்களிலும் அணுகலாம். 

தனியார் இ-சேவை மையங்கள், தனியார் இணையதள சேவை மையங்களையும் அணுகலாம். ஆனால் மேற்கண்டுள்ள சேவைகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தொகை ஒரு சேவைக்கு ரூ.60 மட்டுமே. பொதுமக்களிடம் தனியார் இணையதள சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், தனியார் இணையதள சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஐடி' நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments