புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் ஆய்வு
சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் ஆய்வு

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் சீ. சுரேஷ்குமாா், புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய அவா், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் உதவும் சங்கம் ஆகியவற்றின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ. 1.33 லட்சம் மதிப்பில் உதவித் தொகைகளை வழங்கினாா்.

தொடா்ந்து டாம்கோ மூலம் குழுக்கடன்களைப் பெற்ற 24 பயனாளிகளில் சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மா. மாரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments