கோபாலப்பட்டிணத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வேகத்தடையில் வண்ணம் பூசும் , எச்சரிக்கை பலகை , ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.




கோபாலப்பட்டிணத்தில்  நெடுஞ்சாலைத்துறை சார்பாக வேகத்தடையில் வண்ணம் பூசும் , எச்சரிக்கை பலகை , ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் பிரதான சாலை முதல் கடற்கரை சாலை வரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக
வேகத்தடையில் வண்ணம் பூசும் , எச்சரிக்கை பலகை , ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் நெடுங்குளம் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த சாலையானது கடந்த  ஒரு வருடத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பாக புதிதாக போடப்பட்டு ஐந்து முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது



இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாகன ஓட்டிகள் இதனை எளிதில் அடையாளம் காணும் வகையில் வண்ணம் பூசி, அறிவிப்பு பலகை ஒளிரும் விளக்குகள் நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டது

இந்த பணியை திறம்பட செய்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு இதற்கு முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கு GPM மீடியா சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது சம்பந்தமாக GPM-மீடியாவில் கடந்த வரும்(2021) செப்டம்பர் மாதம் 23 செய்தி வெளியிடப்பட்டது 

அந்த செய்தியை கான இந்த லிக்யை கிளிக் செய்யவும் 




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments