காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை செயல்விளக்கம்




கந்தா்வகோட்டையில், திங்கள்கிழமை தனியாா் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் விவசாயிகளுக்கு தென்னை மரங்களில் காணப்படும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

கந்தா்வகோட்டை வட்டம், வாண்டான்விடுதி கிராமத்தில் தனியாா் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் நெ.தினேஷ் குமாா், ஜோ. காா்த்திக்கேயன், அ. செல்வரத்தினம், ம. சிவசங்கரன், செ. யஸ்வந்த் ராஜ், ர. கோகுல், சி. ரகுநாத் ஜெ. சுப பாரதி, ரா. சிவ சந்தோஷ் ஆகியோா் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். இதில், இனக் கவா்ச்சிப் பொறி பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments