சவுதியில் கோமா நிலையில் தவித்த தமிழர்.. உதவி செய்து அனுப்பி வைத்த ரியாத் தமிழ்ச் சங்கம்




சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உணர்வில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த முக்கூரான் முருகவேலை இந்திய தூதரக உதவியுடன் ரியாத் தமிழ் சங்கத்தினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி நிமித்தமாக தங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக தமிழர்கள், மலையாளிகள், வங்காளிகள் பலர் உயர்மட்ட பணி தொடங்கி ஓட்டுநர், கட்டிடப் பணி போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முக்கூரான் முருகவேல்(49). இவர் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் பணிபுரிந்து வந்து உள்ளார். கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கினார் முருகவேல். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகவேல், கோமா நிலைக்கு சென்றார்.

முக்கூரான் முருகவேல் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற தகவலும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவே நாடு கடந்து உறவினர்களை பிரிந்து முக்கூரான் முருகவேல் சவுதி அரேபியா சென்றார். அவரை கோமா நிலையில் இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சையளிக்க அதிக செலவாகும் என்று அஞ்சிய குடும்பத்தினர் குணமானதும் அனுப்பி வையுங்கள் என்று கூறி இருக்கின்றனர்.

மதம் கடந்து தோள் கொடுத்த தமிழர்கள்
குடும்பத்தினரின் நிலையை புரிந்துகொண்ட ரியாத் தமிழ் சங்கத்தின் நிர்வாகி ஜமால்சேட் குழுவினருடன் இணைந்து முயற்சி எடுத்து சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் மருத்துவ வளாகத்தில் முக்கூரான் முருகவேலை அனுமதித்தார். பின்னர் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரை சென்னை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


நிதியுதவி செய்த ரியாத் வாழ் சங்கத்தினர்
இதுகுறித்து இந்திய தூதரகத்தின் உதவியை நாடிய ரியாத் தமிழ் சங்க நிர்வாகிகள், சொந்தமாக பணம் செலவழித்து மருத்துவக் குழுவினருடன் சென்னைக்கு விமானத்தில் முக்கூரான் முருகவேலை அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்ற முக்கூரான் முருகவேல், மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments