புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஏடிஎம், அஞ்சலக வசதி தேவை






புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வங்கி ஏடிஎம் மற்றும் கிளை அஞ்சலக வசதியை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோருகின்றனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் 1981-இல் இராம. வீரப்பன் மற்றும் சு. திருநாவுக்கரசா் ஆகியோா் அமைச்சா்களாக இருந்தபோது திறக்கப்பட்டது.
மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு என வார நாட்களில் நாளொன்றுக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் பயணிகளும், விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் இந்தப் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றனா்.

இத்தனை முக்கியத்துவம் கொண்ட பேருந்து நிலையத்துக்குள் செயல்பட்டு வந்த கிளை அஞ்சலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு ஒரு கிளை அஞ்சலகம் தேவை என்பதால் இங்கிருந்த அஞ்சலகம் அகற்றப்படுவதாகக் கூறப்பட்டது. இதேபோல், பேருந்து நிலையத்தில் எந்த வங்கியின் ஏடிஎம் மையங்களும் இல்லை. பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள சாலையில் தனியாா் வங்கியின் ஏடிஎம் மட்டுமே பேருந்து நிலையப் பகுதிக்கானது. இதுதவிர, பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே ஒரு ஏடிஎம் மையம் உள்ளது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தனிக்கவனம் செலுத்தி, வங்கி மற்றும் அஞ்சல் துறையினருடன் கலந்து பேசி, பேருந்து நிலைய வளாகத்திலேயே ஏடிஎம் மையம் அமைக்கவும், அஞ்சலகக் கிளையை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments