கோபாலப்பட்டிணத்தில் ஆறு மாதங்களாக எரியாத தெருவிளக்கு! GPM மீடியாவின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!!



கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஆறு மாதங்களாக எரியாத தெருவிளக்கை சரி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனபோக்காக செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் மெயின் வீதியில் கடந்த ஆறு மாதங்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.தெருவிளக்கு எரியாததால் பெண்கள் குளத்திற்கு செல்வதற்கும், மீமிசல் மற்றும் பெரியபள்ளிவாசல் பகுதிக்கு சென்று வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து GPM மீடியாவில் இரண்டு முறை செய்தி வெளியிடப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 27 2021 அன்று வெளியிடப்பட் செய்தி



மார்ச்  12 2022 அன்று வெளியிடப்பட் செய்தி



GPM மீடியாவின் கோரிக்கை:

 கடந்த 31.03.2022 அன்று பொதுநலன் கருதி ரமலான் நோன்பு வருவதை முன்னிட்டு கோபாலப்பட்டிணத்தில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும் என GPM மீடியா சார்பில் ஊராட்சி  மன்ற நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பது வேதனைக்குரியதாகவே உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா..? அல்லது உறங்குகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

GPM மீடியாவின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் வாட்ஸ்ஆப்
வாயிலாக செய்தி அனுப்பப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments