மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் சிவயோகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கனரா வங்கி கணக்கு எண்ணை எவ்வாறு பராமரிப்பது. எமிஸ் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வினை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து தலைமையாசிரியர்களிடம் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் எவ்வாறு செயல்படுவது குறித்தும், தன்னார்வலர்களை விடுமுறையில் வகுப்பு எடுப்பது குறித்த விவரங்கள் கேட்கப்பட்டது. தொடக்கநிலை ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சியினை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளிக்கு வழங்கப்பட்ட மானியம் செலவின தொடர்பான பயன்பாட்டு சான்றிதழ், மகிழ்கணிதம் பயன்பாட்டு சான்றிதழ் மற்றும் பள்ளி பரிமாற்று திட்டம் பயன்பாட்டு சான்றிதழ் ஆகியவை தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டது. கூட்டத்தில் 67 தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் முத்துராமன், அங்கயற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments