மீமிசல் பகுதியில் தக்காளி விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை

மீமிசல்  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி பழம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலைப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் பெரும்பாலான பொது மக்கள் மீன் பிடித்தல் மற்றும் விவசாயம் கூலி தொழில் செய்து அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்து வரும் நிலையிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,000 கடந்து விற்று வருகிறது. இதனை ஈடு செய்ய அனைத்து தரப்பு மக்களும் கிடைத்த கூலி வேலைகளை பார்த்து நாள் தோறும் போராடி வரும் நிலையில் உக்ரைன் போரை காரணம் காட்டி சமையல் எண்ணெய் ருபாய் 200வரை மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் மல்லி, பட்ட மிளகாய் உள்ளிட்டவைகளும் 200 ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தற்போது தக்காளி விலையும் கிலோ ரூ.80, ரூ.90-க்கு விற்பனை ஆகி வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.10-க்கும் ரூ.20-க்கும் விற்பனை ஆகி வந்த தக்காளி தற்போது, கிலோ ரூ.80 மற்றும் ரூ.90-க்கு விற்பனை ஆகி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருந்து வருவதாக இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments