புதுக்கோட்டையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6¾ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியை சேர்ந்த அறிவுமணியின் மனைவி லதா (வயது 45). இவர் மேல 2-ம் வீதியில் டீக்கடை நடத்தி வருகிறார். லதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மொபட்டில் டீக்கடைக்கு சென்றார்.
அப்போது சந்தைபேட்டை ரோட்டில் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென லதாவின் கழுத்தில் கிடந்த 6¾ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடினர். இதில் நிலைதடுமாறிய லதா கீழே விழுந்தார். சங்கிலியை பறித்து சென்றவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்துள்ளார். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments