புதுக்கோட்டையில் சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம்

    

புதுக்கோட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.என்.ராமச்சந்திரன் தலைமையில்  எஐடியுசி மாவட்ட செயலாளர் சிங்கமுத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் சோமையா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சொர்ணகுமார், முருகானந்தம், அரசப்பன், உலகநாதன், மீராமுகைதின், நாகராஜன், விஜயரெங்கன், உள்ளிட்ட தோழர்கள் ஒன்றிய பி.ஜே.பி மோடி அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments