ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

ஆவுடையார்கோவில்  ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடத்தில் தண்ணீரை பிடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் தீயணைப்பு வாகனம் பழுதடைந்து விட்டதாக கூறினர். 

மேலும் தீயணைப்பு விரர்கள் விரைந்து வந்து குடத்தின் மூலம் தண்ணீரை பிடித்து பொதுமக்களுடன் தீயை அணைத்தனர். இந்நிலையில் அதன்பிறகு மீண்டும் தீ பிடிக்க ஆரம்பித்ததால் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் வந்து, அதில் இருந்து குடத்தின் மூலம் தண்ணீரை பிடித்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்நிலையில் பழுதடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments