தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி தீவிரம்.






தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
போக்குவரத்து அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகிறது.
தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வழியாக கிழக்கு கடற்கரை சாலை ராமேசுவ ரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

ராமேசுவரம், தூத்துக்குடி, கேரளாவின் எல்லைப்பகுதியான களியக்காவிளை ஆகிய பகுதிகளில் இருந்து பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தொண்டி வழியாக செல்கின்றன.

போக்குவரத்து அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் சாலையை விரிவுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி தொண்டி அருகே உள்ள பெரிய வலசைபட்டினம் மற்றும் நம்புதாளையை அடுத்த லாஞ்சியடி பகுதியிலும் கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகி றது. இந்த பணி முடிவடைந்த பிறகு போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments