கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவுடையார்கோவில் தாலுகா ஒக்கூர் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகையை ஆவுடையார்கோவில் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். ஏம்பல் பஸ் நிறுத்தம் அருகே 100 ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஏம்பல் அருகே ஆலத்திமனை கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் பிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கிராமம் ஒற்றுமையாக இருக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments