அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பொதுமக்கள் அமரவும் பேருந்துகள் நிறுத்த போதுமான நிறுத்தங்களை பேருந்து நிலையத்தில் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக பெரிய நகராக விளங்கி வருகிறது. மேலும் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், குமுளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதனால், அறந்தாங்கி பேருந்து நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான அறை மாதக்கணக்கில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து கடந்த காலங்களில் GPM மீடியாவில் வெளியிட்டுள்ள செய்திகள் பின்வருமாறு

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்ற குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாக எழுந்து வருகின்றது. தினசரி நூற்றுக்கணக்கான புறநகர் பேருந்துகளும் 50-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளும் அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

ஆனால் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும் என்ற சூழல் நிலை வருகிறது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமருவதற்கும் போதுமான இடம் இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது போல பொதுமக்கள் பல வகைகளும் கடும் அவதியை அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதி சுகாதாரமற்ற முறையில் இருந்து வருகிறது, அதையும் சரி செய்து பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து போதுமான பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும், பொதுமக்கள் அமர உரிய இருக்கைகளை அமைக்க வேண்டும், கூடுதலாக சுகாதாரமான சூழல் பேருந்து நிலையத்திற்குள் நிலவவும் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அறந்தாங்கி பொதுமக்கள் கவலையுடன் முன்வைக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments