தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கைகீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அறந்தாங்கி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை உற்பத்தி செலவைவிட குறைவாக உள்ளது.

அதனால் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தென்னை விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஒரு தேங்காய் ரூ.17-க்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று நடக்கும் சுதந்திர தின கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைபா) நிர்வாகிகள் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments