ஏம்பக்கோட்டை ரஹுமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் ஆலிமா, ஆசிரியைகளுக்கான விளக்க முகாம்
    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள ஏம்பக்கோட்டை மஹல்லாவில் உள்ள ரஹுமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் 10/09/22 ஞாயிற்றுக்கிழமை அன்று மதரஸா  மற்றும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆலிமா, ஆசிரியைகளுக்கான ஆசிரியர் பயிற்சி விளக்க முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை மதரஸாவின் முதல்வர் மௌலானா முகமது மைதீன் ஹஜரத் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் மக்தப் வரலாறு 
கற்பிக்கும் முறை தஜ்வீதின் முக்கியத்துவம், உளவியல் பாடத்திட்ட விளக்கம், கேள்வி-பதில் போன்ற பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு உலமாக்கள் கலந்துகொண்டு பலவிதமான விளக்கங்களை கொடுத்தனர்.

கட்டுமாவடி,கோட்டைப்பட்டிணம்,கோபாலப்பட்டிணம்,R.புதுப்பட்டிணம், அரசநகரிபட்டிணம், செந்தலைப்பட்டிணம், எஸ்.பி.பட்டிணம், ஏம்பக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து 85-க்கும் அதிகமான ஆலிமாக்களும், பட்டம் பெறக்கூடிய இறுதி ஆண்டு மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இறுதியாக மதரஸாவின் நிறுவனர் ஹாஜி N.S .அயூப்கான் அவர்களின் பெற்றோர்களான மர்ஹூம் சுலைமான் அவர்களுக்கும், மர்ஹூமா ரஹுமா பீவி அவர்களுக்கும் யாஸீன் ஓதி துஆ செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இறுதியில் நடந்த விளக்க முகாமில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலை சொன்ன அதிகமான நபர்களில் மூன்று நபர்களுக்கு மட்டும் குழுக்கள் முறையில் குர்ஆன் கிதாபுகள் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியாக மௌலானா சவுக்கத் அலி ஹஜரத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments