பொதுத் தேர்வுக்கு தயாராகும் விதமாக10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கல்வித்துறை ஏற்பாடு
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் இப்போதில் இருந்தே தயாராகும் விதமாக கல்வித்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பொதுத் தேர்வை எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், பொதுத் தேர்வை மன அழுத்தத்துக்குள்ளாகாமல் எதிர்கொள்ளும் வகையிலும் அவர்களை தயார்படுத்த பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்றும், இது 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

இந்த தகவல் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இது ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதான் என்றாலும், இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments