கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கழிவறை கட்டிடம் திறப்பு
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட நாள் கோரிக்கையான பெண்களுக்கான கழிவறை வசதி பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று  30/09/2022 வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், SRM. சேக் பரீது மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் பிள்ளைகளுக்கு இருந்த கழிவறை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பெண் பிள்ளைகளுக்கு தனியாக கழிவறை கட்டித்தர வேண்டி அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி தரவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி கழிவறை கட்ட முடிவு செய்து களத்தில் இறங்கினர். அதனடிப்படையில் சகோதரர் SRM. இம்ரான் கான் அவர்களிடம் நிதி கேட்ட போது நானே முழுமையாக கட்டி தருகிறேன் என பொறுப்பேற்று கொண்டார். அதன்படி RSM பில்டர்ஸ் சார்பாக எந்த ஒரு கமிஷனும் இல்லாமல் வேலை செய்து தருவதாக முன்வந்த நிலையில் உமர் (எ) அசார் ரிலாக்ஸ் கன்ஸ்ட்ரக்ஸன் மேற்பார்வையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டது.

 
கழிவறை கட்டி முடிக்க பொருளாதார உதவி செய்த சகோதரர் SRM.இம்ரான் கான் அவர்களுக்கும், இதற்காக உழைத்த RSM.பில்டர்ஸ் செய்யது இபுராஹிம், அசார் ரிலாக்ஸ் கன்ஸ்ட்ரக்ஸன் மற்றும் உறுதுணையாக இருந்த சகோதரர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை பள்ளி ஆசிரியபெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்: அப்துல் ரசாக், கோபாலப்பட்டிணம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments