மல்லிபட்டிணம் மனோராவில் அமையுது கடற்பசு பாதுகாப்பகம்
உலகின் மிகப்பெரிய தாவர வகை, கடல் பாலுாட்டியான கடற்பசுக்களை பாதுகாக்க, கடலுக்கு அடியில் கடற்புற்கள் பாதுகாக்கப்படும்.

இது, கடல் சார்ந்த சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்யும். கடல் புல் படுகைகள், பல்வேறு வகை மீன் இனங்கள், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்.

தமிழகத்தில், அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கடற்பசு இனத்தையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதலாவதாக, தமிழகத்தில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளன.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடற்பசுக்களின் வாழ்விடத்தை அழிவில் இருந்து பாதுகாக்க, புதிய காப்பகம் ஏற்படுத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள், மீனவர்கள் பங்கேற்புடன், இந்த காப்பகம் அமைக்கப்படும். இதற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு மையம்

இதன்படி, பொது மக்கள், சுற்றுலா பயணியர், கடற்பசுக்கள் குறித்து அறிய, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா என்ற இடத்தில், 448 சதுர கிலோ மீட்டரில், இதற்கான சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

கடற்பசுக்கள் காட்சிக்கூடம், அருங்காட்சியகம், அறிவுசார் தகவல் மையம், பொழுதுபோக்கு பூங்கா, நுாலகம் போன்ற வசதிகளும் அங்கு அமையும்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில் பணிகள் துவக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments