கொலைக்களமாகும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை: 4 ஆண்டுகள் - 2,076 உயிர்கள் பலி
 திருச்சி இடையே 334 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை - 45ல் கடந்த 4 ஆண்டுகளில் நேரிட்ட சாலை விபத்துகளில் குறைந்தது 2,076 பேர் பலியாகியுள்ளனர். 7,000 பேர் காயமடைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில், நடந்த பல்வேறு சாலை விபத்துகளுக்குக் காரணம் வெறும் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, போதுமான அளவுக்கு நெடுஞ்சாலைகளை ஒட்டிய பயன்பாட்டுச் சாலைகளும், சாலை வடிவமைப்பில் இருக்கும் குளறுபடிகளும்தான்.

.

புள்ளிவிவரம்

4 ஆண்டுகளில் நடந்த மொத்த விபத்துகள் - 6,131

பலியானோர் எண்ணிக்கை - 2,076

காயமடைந்தவர்கள் - 7,733 

 

இந்த நான்கு வழி நெடுஞ்சாலை, கடந்த 2000-ஆவது ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது, இதுஒன்றுதான் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கான ஒரேப் பாதை. இந்த சாலை, வடிவமைக்கப்பட்டபோது, நாள்தோறும் 35 ஆயிரம் பயணிகள் வாகனங்களை கையாளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இப்போதோ, ஒரு நாளைக்கு சராசரியாக 1.4 லட்சம் பயணிகள் வாகனங்களை கையாண்டுவருகிறது.

இந்த நெடுஞ்சாலைக்கு போதுமான அளவுக்கு அணுகு சாலைகள் இல்லாததும், இலகு ரக வாகனங்களுக்கான தனிவழி இல்லாததும், இந்த நெடுஞ்சாலையில் தாம்பரம் முதல் உளுந்தூர்பேட்டை வரையிலான 121 கிலோ மீட்டர் தொலைவுக்கான சாலைகள் வாகன ஓட்டிகளின் உயிர்களைக் கொல்லும் கொலைக்களமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 50 சதவீதம் இந்த பகுதிக்குள்தான் நடந்துள்ளது என்கிறது ஆர்டிஐ மூலம் காவல்துறையிடமிருந்து பெற்ற தகவல்கள். 

இப்பகுதியை அதிக விபத்துகள் நடக்கும் இடமாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கருப்புப் பட்டியலில் சேர்த்தும் கூட விபத்துகளை மட்டும் குறைக்க முடியவில்லை. காரணம்,  தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு போதுமான பக்கவாட்டு சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைக்கு அணுகுசாலைகளும் போதுமான அளவில் வடிவமைக்கப்படாததே காரணம் என்கிறார்கள் கிராம மக்கள்.

தாம்பரம் - திருச்சி இடையே இருக்கும் பல கிராமங்களுக்கு, இந்த தேசிய நெடுஞ்சாலையோரம் பயன்பாட்டுச் சாலையோ அல்லது அணுகும் சாலைகளோ இதுவரை ஏற்படுத்தப்படவேயில்லை. 2014ஆம் ஆண்டு வரை, உளுந்தூர்பேட்டை சந்திப்புச் சாலை,  சராசரியாக ஒவ்வொரு 10 நாள்களுக்கும் ஒரு முறை விபத்தில் ஒரு பலி என்ற அளவில் பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது ஒரு சில இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்ரவாண்டியைச் சேர்ந்த ரத்தினவேலு கூறுகிறார்.

எமனின் பாசக் கயிறாக காத்திருக்கும் பள்ளங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே தவிர, வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை தரவுகளின்படி, பெருங்களத்தூர் பேருந்து நிலையம் முதல் விழுப்புரம் வரை 51 சாலைப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

ஓட்டுநர்களின் கவனக்குறைவு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற பல்வேறு மனிதத் தவறுகளும், இந்த பள்ளங்களும் ஒரே இடத்தில் சந்திக்கும்போது விபத்துகள் நேரிடுகின்றன. இதனால், இந்த சாலைப் பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு கொலைக்களங்களாக உயிர்களைப் பலி வாங்கக் காத்துக் கொண்டிருக்கும் எமனின் பாசக்கயிறாகவே காட்சியளிக்கின்றன.

நெடுஞ்சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளன என்பதை, சாலை விளக்கப் பலகைகள் இல்லாதது, பெரிய பெரிய பள்ளங்கள் போன்றவையே காட்டிக்கொடுக்கின்றன. புதிதாக பொய் சொல்லவோ காரணம் இல்லாம் குற்றம் சாட்டவோ இதில் எதுவுமே இல்லை. மிகைப்படுத்தவும் தேவையில்லை.

இவ்வளவையும் தாண்டி, பயன்பாட்டுச் சாலைகளில் குவிந்திருக்கும் மணல், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் என பள்ளங்களிலிருந்து தப்பித்து வரும் வாகன ஓட்டிகளை ஒரு பதம் பார்க்கக் காத்திருக்கின்றன என்கிறார் நாள்தோறும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டி சித்தார்த்.

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிப்பது என்னவென்றால், 98 கிலோ மீட்டர்  தொலைவிலான தாம்பரம் - திண்டிவனம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை, மனிதர்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சாலையை கட்டமைக்க செலவிடப்பட்ட தொகையை விடவும் ஆத்தூர் மற்றும் பரனூர் இடையே அமைந்திருக்கும் சுங்கச்சாவடிகள் மூலம் இரண்டு மடங்கு தொகை வசூலிக்கப்பட்டும் கூட, தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் சட்டப்பிரிவு 2008-ன்கீழ், அந்த சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு இன்னமும் மனம் வரவில்லை. எப்போது வரும் என்றும் தெரியவில்லை.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய சாலைப் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே எட்டுவழிப்பாதையும், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே எட்டு வழிப்பாதையும் அமைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  அறிவித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் இதற்கான பணிகள் தொடங்குவதற்கான எந்த தடயமும் தென்படவில்லை.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 விபத்துப் பகுதிகள் கண்டறியப்பட்டு, 28 கிலோ மீட்டத் தொலைவுக்கு  உயர் நடைப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுகள் பணிகள் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ள அல்ல..

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் எழுதிய கடிதத்துக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுதிய பதிலில், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அமைக்கப்படும் சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை 60 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதை நினைவில் கொள்ளாமல் இருப்பது நலம்.

அதற்காக தேசிய நெடுஞ்சாலையில் எதுவுமே நடக்கவில்லை என்று கூற முடியாது..

எல்லிஸ் சத்திரம், அரசூர் குறுக்குச் சந்திப்பு, கூட்டேரிப்பட்டு சந்திப்பு, பதூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகனங்கள் சென்று வர சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
 
திருமாத்தூர் அருகே பயன்பாட்டுச் சாலை வரவிருக்கிறது.
 
ஜக்கம்பேட்டை பேருந்து நிறுத்தம், முண்டியம்பாக்கம், அண்ணாமலை உணவகம், பாப்பனாபட்டு பேருந்து நிறுத்தம் மற்றம் விக்கிரவாண்டி சாலை சந்திப்பு ஆகிய ஐந்து இடங்களிலும் வாகனங்கள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments