மணமேல்குடி சுற்றுவட்டார பகுதியில் கண் நோயை கட்டுப்படுத்த முகாம் நடத்த வேண்டுகோள்





        கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெண் படல அலர்ஜி நோய் என்ற கண் நோய் (மெட்ராஸ்-ஐ) அதிகமாக பரவி வருகிறது. மணமேல்குடி பகுதிகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. வீட்டில் ஒருவருக்கு மெட்ராஸ்-ஐ வந்தால் அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது. இதனால் சிகிச்சைக்காக கண் மருத்துவரை நாடி வெளியூர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நோயின் தாக்கம் 3 நாள் முதல் ஒரு வாரம் வரை இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் கண் மருத்துவர் இல்லாததால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து கண் மருத்துவரை கொண்டு முகாம் அமைத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments