ஆவுடையார்கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா 2022-2023! (27/12/2022 முதல் 06/01/2023) ரயில் & பேருந்து விவரங்கள்




ஆவுடையார்கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா 2022-2023! (27/12/2022 முதல் 06/01/2023)

வெளியூரில் இருந்து  ஆவுடையார் கோவில் வரும் பக்தர்களுக்காக ரயில் & பேருந்து விவரங்களை வெளியிட்டுள்ள ஆவுடையார் கோவில் சுற்றுலாதலம்

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள திருவாசகம் பிறந்த திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார்கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை காண
மயிலாடுதுறை/திருவாரூர்/ பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி விரைவு இரயிலை பயன்படுத்தி அறந்தாங்கி இரயில் நிலையத்தில் இறங்கி ஆவுடையார்கோவிலுக்கு பேருந்து மூலம் செல்லலாம்.

இரயில்‌ நேர அட்டவணை.
06695 மயிலாடுதுறை - திருவாரூர் விரைவு இரயில்

காலை 
06:15AM மயிலாடுதுறை 

06197 - திருவாரூர் - காரைக்குடி விரைவு இரயில் 

08:10AM திருவாரூர்
08:57AM திருத்துறைப்பூண்டி 
09:50AM பட்டுக்கோட்டை

 குறிப்பு மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி வரை ஒரே இரயில் தான் இரயில் எண்கள் மட்டுமே வேறு.

அறந்தாங்கி இரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் 300 மீட்டர் தொலைவு மட்டுமே.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து ஆவுடையார் கோவிலுக்கு 05 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறது.

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு பயண நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

 குறிப்பு - அறந்தாங்கியில் இருந்து மீமிசல், தொண்டி, திருப்புணவாசல், கோட்டைபட்டினம்(வழி ஆவுடையார்கோவில்)
செல்லும் பேருந்துகளில் ஆவுடையார்கோவிலுக்கு செல்லாம்

ஆத்மநாதர் தரிசனம் முடித்துவிட்டு அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை/திருவாரூர்/ மயிலாடுதுறைக்கு செல்ல காரைக்குடி - திருவாரூர் - மயிலாடுதுறை இரயிலை பயன்படுத்தி செல்லலாம்.

ஆவுடையார்கோவில் இருந்து அறந்தாங்கி செல்ல 05 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து உள்ளது.

அறந்தாங்கி இரயில் நிலையத்தின் நேரம் 

மாலை அறந்தாங்கி - 04:35PM

இரயில் வசதியானது வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு கிழமை தவிர அனைத்து நாள்களிலும் இயங்கும்

 சிக்கனமான பயணம், விரைவான பயணம், பாதுகாப்பான பயணம் இரயில் பயணம்.....

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து திருப்பெருந்துறை ஆத்மநாதர் ஆலயத்தை வந்தடையும் வழிகள்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் திருச்சி (மத்திய பேருந்து நிலையம்) வந்தடைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அறந்தாங்கி நேரடி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் மதுரை மாட்டுத்தாவணி (MGR பேருந்து நிலையம்) வந்தடைந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அறந்தாங்கி/ பட்டுக்கோட்டை பேருந்துகளில் பயணம் செய்து அறந்தாங்கியை வந்தடைந்து.

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்படுகிறது.

 தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்து நேரடி பேருந்துகள். 

CMPT பேருந்து நிலையம் சென்னை.

08:45pm சென்னை - அறந்தாங்கி 
09:15pm சென்னை - ஆவுடையார்கோவில் 

திண்டுக்கல் - அறந்தாங்கி
02:00am, 03:45am, 09:30am, 12:00pm, 05:30pm, 05:40pm, 06:40pm

திருச்செந்தூர் - ஆவுடையார்கோவில்
05:55am

தேனி - அறந்தாங்கி
09:30am, 04:00pm

ஈரோடு - அறந்தாங்கி
11:50pm

மார்கழி திருவாதிரை பெருவிழா கொடியேற்றம்!

ஆவுடையார்கோவில் அருள்தரு சிவயோக நாயகி யோகாம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதசுவாமி மற்றும் அருள்திரு மாணிக்கவாசகர் திருக்கோயில் மார்கழி திருவாதிரை பெருவிழா நாளை ஏழு நிலைகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மார்கழி திருவாதிரை பெருவிழா 2022-2023!
(27/12/2022 முதல் 6/1/2023).

மார்கழி 11 (26.12.2022) திங்கட்கிழமை மாலை 5:30 - 7:16 மணிக்குள் விக்னேஸ்வரபூஜை.

முதல்நாள் திருவிழா!
மார்கழி 12 (27.12.2022) செவ்வாய்கிழமை காலை 5 மணிமுதல் 6:35 மணிக்குள் கொடியேற்றம் மாணிக்கவாசகர்
நிஜரூபம் தரிசனம்.
மாலை வெள்ளிச்சிவிகை வாகனம் அரிமர்த்தன பாண்டியன் அலங்காரம்!

இரண்டாம் நாள் திருவிழா!
மார்கழி 13 (28.12.2022) காலை வெள்ளி சூரியபிரபை வாகனம் நிஜரூப அலங்காரம்.
மாலை வெள்ளி சந்திரபிரபை வாகனம் நிஜரூப அலங்காரம்.

மூன்றாம்நாள் திருவிழா!
மார்கழி 14 (29.12.2022) காலை வெள்ளி படிச்சட்டம் வாகனம் முதலமைச்சர் அலங்காரம். 
மாலை வெள்ளி பூத வாகனம் ராஜ அலங்காரம்.

நான்காம் நாள் திருவிழா!
மார்கழி 15 (30.12.2022) காலை திரிபுர எரித்த காட்சி
மாலை வெள்ளி கைலாய வாகனம் சிவபெருமான் அலங்காரம்.

ஐந்தாம் நாள் திருவிழா! 
மார்கழி 16 (31.12.2022) காலை வெள்ளிச் சிவிகை வாகனம் சிவபூஜை காட்சி
மாலை வெள்ளி படிச்சட்டம் வாகனம் ராஜா அலங்காரம்.

ஆறாம் நாள் திருவிழா! 
மார்கழி 17 (01.01.2023) காலை ஊர்த்துவ தாண்டவ அலங்காரம் பக்தி உலா காட்சி
மாலை வெள்ளி யானை வாகனம் யானைபடை தளபதி அலங்காரம்.

ஏழாம் நாள் திருவிழா! 
மார்கழி 18 (02.01.2023) காலை உருத்திராட்ச மணி வாகனம் பிட்டு நேர்பட மண் சுமந்த பேரருள் காட்சி. 
மதியம் 108 சங்கபிஷேகம்.
மாலை குருத்தோலை சப்பரத்தேர் வெள்ளி மஹா ரிஷப வாகனம் சிவபெருமான் அலங்காரம்.

எட்டாம் நாள் திருவிழா!
மார்கழி 19 (03.01.2023) காலை வெள்ளி படிசட்டம் வாகனம் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் திருவாசகத்திற்கு உரைத்த காட்சி.
மாலை வெள்ளி குதிரை வாகனம் குதிரை சேவகன் அலங்காரம்.

ஒன்பதாம் நாள் திருவிழா!
மார்கழி 20 (04.01.2023) அதிகாலை 5மணி முதல் 6மணிக்குள் மாணிக்கவாசகர் திருத்தேருக்கு எழுந்தருளல் காலை 10மணிக்கு வடம் பிடித்தல் நிஜரூப அலங்காரம் திருத்தேர் பவனி.
மாலை வெள்ளி சந்திரபிரபை வாகனம் நடராஜர் அலங்காரம்.

பத்தாம் நாள் திருவிழா!
மார்கழி 21 (05.01.2023) காலை வெள்ளிப் படிச்சட்டம் வாகனம் பிச்சடானர் அலங்காரம் பஞ்சபிரகார சேவை.
மாலை ராஜா அலங்காரம் 
வெள்ளிரதத்தில் பவனி.

பதினோராம் நாள்
மார்கழி 22 (06.01.2023) அதிகாலை 5மணி முதல் 6மணிக்குள் இங்கு சிவபெருமான் உருவமற்று அருவியாக இருப்பதனால் நம்பியார் எனும் அந்தணர் சிவவேடம் அணிந்து உபதேசக்காட்சி!
புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் நடராஜருக்கு வடக்கூர் அருள்மிகு ஸ்ரீ ஆதிகைலாசநாதர் திருக்கோயிலில் காலை 7மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் இரவு நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வருகிறார். திருவிழா நிறைவு.

திருப்பெருந்துறை ஆத்மநாதர் ஆலயம் பற்றிய தகவல்கள் அறிய தொடர்பு கொள்ளவும்.

 திரு. பெருமாள் நடராஜன் - +919843368533
திரு. முருகானந்தம் BSc agriculture., - 9750988683

தகவல் :  ஆவுடையார் கோவில் சுற்றுலா தலம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments