புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றம் தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி தகவல்
புதுக்கோட்டை, கவிநாடு கிழக்கு ஊராட்சியில் 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கம்மாள் பழனிச்சாமி தெரிவித்தார்.

குளியல் தொட்டி

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கவிநாடு கிழக்கு ஊராட்சிமன்ற தலைவர் ப.ரெங்கம்மாள் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் ஊராட்சியில் அமைந்துள்ள 18 குக்கிராமங்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணப்பட்டி, சின்னக்கணக்கம்பட்டி இடுகாட்டில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.

கீழ விளாக்குடிக்கு 1 போர்வெல் மணப்பட்டியில் போடப்பட்டுள்ளது. சிவகாமி ஆச்சி நகரில் இடுகாட்டில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சின்னக்கணக்கன்பட்டி, பெருநாங்குபட்டி, சடையபச்சி கோவில் ஆகிய இடங்களில் மினி ஓ.எச்.டி. டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கணக்கர்பட்டியில் தரைமட்டத்தொட்டி 2-ம், மேலவிளாக்குடியில் தரைமட்டத்தொட்டியும், சிவகாமி ஆச்சி நகரில் வடிகால் வாய்க்காலும், சிவகாமி ஆச்சி நகரில் இருந்து கீழ விளாக்குடியில் செல்லும் வழியில் தெருவிளக்கும் அமைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி மன்ற அலுவலகம்

இதேபோல் சிறுநாங்குடி, பெருநாங்குபட்டியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளன. தண்டலையில் தரைமட்டத்தொட்டி கட்டப்பட்டுள்ளன. தங்கம் நகர், சின்ன கணக்கன்பட்டி, நியூ அன்னை நகர் உள்பட 8 இடங்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. கீழவிளாக்குடியில் 62 வீடுகளுக்கும், ஆட்டாங்குடியில் 60 வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்டாங்குடியில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது. அதன் அருகே அங்கன்வாடி மையமும் அமைக்கப்பட உள்ளது. ஆட்டாங்குடியில் துணை சுகாதார நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. பிரசன்ன ரெகுநாதன புரத்தில் தார்ச்சலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கே கலையரங்கமும் கட்டப்பட்டுள்ளன. 3 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளன.

முன்மாதிரி ஊராட்சியாக...

குடிநீர் பிரச்சினையை தீர்க்க 4 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கணக்கன்பட்டியில் சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது. இதுதவிர ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற கவிநாடு கிழக்கில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசின் ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியோடு இந்த வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments