ரம்ஜான் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதாக கூறி ராமேசுவரம் வியாபாரியிடம் ரூ.4½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை




ரம்ஜான் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதாக கூறி ராமேசுவரம் வியாபாரியிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதாக கூறி ராமேசுவரம் வியாபாரியிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏழைகளுக்கு அரிசி, பருப்பு

ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் லியாக்கத்அலி (வயது 45). இவர் ராமேசுவரத்தில் ஏஜென்சி வைத்து பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை இர்பான் ஹஜியா என்று அறிமுகம் செய்தார். தற்போது கர்நாடகாவில் கப்பலில் வேலை செய்து வருவதாகவும், ரம்ஜான் நோன்பு வர இருப்பதால் 400 ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை லியாக்கத்அலியின் நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வதாகவும், அதற்கான பணத்தை மொத்தமாக வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தானும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணம் வெளிநாட்டில் இருந்து நன்கொடையாளர்கள் மூலம் வருவதால் அதனை உங்கள் வங்கி கணக்கில் பெறுவதற்கு சில நடைமுறை கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த தொகையை தந்தால் அதற்கான பணிகளை முழுமை செய்துதான் பொருட்களை வாங்கி கொள்வதாக கூறியுள்ளார்.

போலீசில் புகார்

இதை நம்பிய லியாக்கத் அலி, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 18 முறை பல தவணைகளில் ரூ.4லட்சத்து 45 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனாலும் மர்ம நபர் பொருட்களை வாங்காமல் தொடர்ந்து பணம் கேட்டதால் லியாக்கத்அலிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments