விராலிமலையில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுடன் திருச்சி சரக டி.ஐ.ஜி. சந்திப்பு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்




விராலிமலை பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருவதையடுத்து அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விராலிமலை பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் விராலிமலை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் போது இங்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இனிவரும் காலங்களில் வேலைபார்க்கும் இடங்களிலோ அல்லது தங்கியிருக்கும் பகுதியிலோ பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி, விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments