மீமிசல்-ஏம்பக்கோட்டை சாலையில் சென்றவர்களை கடித்து குதறிய வெறி நாய்!






மீமிசல்-ஏம்பக்கோட்டை சாலையில் சென்றவர்களை வெறி நாய் கடித்து குதறியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் நேற்று காலையில் செக்போஸ்ட் அருகே அங்கு வந்த கருப்பு நிற தெருநாய் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளி காலில் கடித்ததில் இரத்தம் வந்தது. மேலும் அந்த பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணையும் கடித்து குதறியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. 
வெறி நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள்

இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் கடிக்க சென்றது.

பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த வெறி நாயை பிடித்து அடித்து கொன்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் உள்ளோம். தினமும் பலர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments