தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 08) தொடங்கி வைக்கிறார் 

 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக இயங்க இருக்கும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 08) தொடங்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை 8-ந் தேதி சென்னை வருகிறார். அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

வண்டி எண் 20683/20684 தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் 29-05-2024 வரை வாராந்திர சேவையாக தாம்பரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செங்கோட்டையில் இருந்து திங்கள்கிழமைகளிலும் இயக்கப்படும்.

16-04-2023 (ஞாயிற்றுகிழமை) முதல் தாம்பரத்தில் இருந்தும் 17-04-2023 (திங்கள்கிழமை முதல் செங்கோட்டையில் இருந்தும் சேவை துவங்கும்.
 
வழக்கமான வாரம் மும்முறை சேவைகள்  01-06-2023 (வியாழக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments