2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் செப்.30 வரையே செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!




கடந்த சில நாட்களாக வருடங்களாகவே 2000 ரூபாய் நோட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் இல்லாத நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 




மேலும் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஆனால் கடந்த சில வருடங்களாக ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டு கிடைப்பதில்லை என்று கூறப்பட்ட நிலையில் 2000 ரூபாய் நோட்டு படிப்படியாக திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டை வைத்திருந்தால் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் ரூ. 2,000 நோட்டை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

நோட்டுகளை செப்டம்பர் 30-க்குள் வங்கிகளில் | கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 வரை மட்டுமே மாற்ற முடியும்; மேலும் 2000 நோட்டுகளை வங்கிகள் விநியோகம் செய்வதை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments